தொழில் செய்யமுடியதளவுக்கு உடல் நிலை பாதிப்பில் வருமானம் பெறும் காப்புறுதி திட்டங்கள்
"தொழில் செய்யமுடியாதளவுக்கு உடல் நிலைமை பாதிக்கப்படும் ஒருவர் எத்தகைய காப்புறுதி திட்டங்கள் மூலம் கனடாவில் வருமானம் பெறலாம் ?"
அதனை ஏழு வகைக்குள் உள்ளடக்கலாம்.
(1) தொழில் காப்புறுதி திட்டத்திலிருந்து கனடிய மத்திய அரசு வழங்கும் சலுகை. (Employment Insurance Sickness Benefit)
தொழிலில் பெற்ற வருமானத்தில் 55% வீதம் வரை அதிலும் ஆக கூடுதலாக கிழமைக்கு $668 டாலர் மட்டுமே தொடர்ந்து 26 கிழமைகளுக்கு, தொழில் செய்யமுடியதளவுக்கு உடல் நிலைமையின் பாதிப்பு ஆரம்பமாகி ஒரு கிழமையின் பின்பு பெறலாம். ஆனால் இதனை பெற விண்ணப்பிப்பவர் கடந்த 52 கிழமைக்குள் சுமார் 600 மணித்தியாலத்திற்கு குறையாது கனடாவில் தொழில் செய்திருக்கவேண்டும்.
(2) அரச ஓய்வூதிய திட்டத்திலிருந்து உடல் இயங்கமுடியதவருக்கு வழங்கப்படும் சலுகைகள். (CPP - Canadian pension plan disability benefits)
தொடர்ந்து தொழில் செய்து வருமானம் பெற்றுவரும் ஒருவர் வருடா வருடம், 65 வயதுக்கு பின்பு ஓய்வு பெறும் காலங்களில் வருமானம் பெறுவதற்காக சிறு சிறு தொகையினை அரச ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்கின்றார்.
65 வயதினை அடைய முன்பு தொழில் செய்யமுடியதளவுக்கு நிரந்தரமாக, அதாவது மீளமுடியதளவுக்கு உடல் நிலைமை பாதிக்கப்பட்டால், இவ் திட்டத்துக்கு மனு செய்து தொடர்ந்து சலுகை பெறலாம்.
தொடர்ந்து விவரமாக தெரிந்துக் கொள்ள வீடியோபை பாருங்கள்...