Category:
Created:
Updated:
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகைக்காக இந்தியாவில் இருந்து 4 உலங்கு வானூர்திகள் இலங்கை வந்தடைந்துள்ளன.இலங்கை உணவகம்
பிரதமர் மோடி 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகை தர உள்ளார்.
இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, நாளை காலை சுதந்திர சதுக்கத்தில் வரவேற்கப்பட்ட பின்னர், ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையே இருதரப்பு கலந்துரையாடல் நடைபெறும்.
இந்த நிலையில் இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது பயன்படுத்துவதற்காக நான்கு MI 17 ரக உலங்கு வானூர்திகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அத்துடன் 40 இந்திய விமானப்படை வீரர்களும் இலங்கை வருகைத்தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
00