வாகன காப்புறுதியின் விலையினை குறைக்கும் புதிய சட்டம் ( New law to lower auto insurance rates)
கனடாவில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் ஒண்டாரியோ மாகாணத்தில் சட்ட ரீதியாக வைத்திருக்கவேண்டிய ஓர் பிரிவினை வாகன காப்புறுதி திட்டத்திலிருந்து அகற்றுவதன் மூலம் காப்புறுதிக்கு செலுத்தும் கட்டணத்தினை சற்று குறைத்து கொள்ளும் ஓர் சந்தர்ப்பத்தினை மாகாண அரசு இவ்வருடம் 2024ம் ஆண்டு தொடக்கத்திலிருந்து உருவாக்கியுள்ளது.
அதாவது வாகன காப்புறுதியில் சட்டரீதியாக பின்வரும் நான்கு பிரிவுகளும் இருக்கவேண்டும். அவையாவன பின்வருமாறு.
(1) LIABILITY COVERAGE
(மூன்றாம் நபர் ஒருவரின் உடல்,உடமைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நட்டஈடு வழங்கும் பிரிவு)
(2) ACCIDENT BENEFITS
(விபத்தில் உடல் காயமுற்றால் நட்டஈடு வழங்கும் பிரிவு)
(3) UNINSURED AUTOMOBILE
(காப்புறுதியில்லாத வாகனங்களுடன் விபத்து நடந்தால் நட்டஈடு வழங்கும் பிரிவு)
(4) DCPD - DIRECT PROPERTY COMPENSATION DAMAGE (No fault coverage )
(விபத்தில் தங்களில் தப்பில்லாத நிலைமையில் தங்கள் வாகனத்துக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கான நட்டஈடு)
இவை தவிர விரும்பினால் மேலதிக நட்டஈட்டு பிரிவுகளை (Collision & Comprehensive coverage) சேர்த்து வைத்திருக்கலாம். இங்கு ஒவ்வொரு பிரிவுக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
இவ்வருடம் 2024ம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து நான்காவதாக குறிப்பிடப்பட்டுள்ள...... தொடர்ந்து மேலும் விவரமாக தெரிந்து கொள்ள வீடியோவை கிளிக் செய்யுங்கள்.