கனடாவில் மதுபோதையில் வாகனம் செலுத்தி பிடிபட்டால் என்ன விளைவுகளை எதிர்கொள்ளவேண்டிவரும்?
உடனடியாக வீதியில் வைத்து கைவிலங்கிட்டு அழைத்து செல்லப்படுவார். ஊதும் பரிசோதனை (Breathalyzer test), உட்பட மேலும் சில பரிசோதனைகள் மூலம் மதுபோதையில் உள்ளார் என்பதனை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்திகொள்ளும் தயார்படுத்தல்களுடன் போலீஸ் நிலைய சிறை கூண்டினுள் தூங்கி ஓய்வு எடுக்க அனுமதிக்கப்படுவார்.
மதுபோதை முறிந்தவுடன் கைவிரல் அடையாளங்கள், படங்கள் எடுத்துவிட்டு வாக்குமூலம் பெற்று நீதிமன்றத்திற்கு சமூகம் அளிக்கும் திகதி நிர்ணயம் செய்து கொடுப்பார்கள். வாக்குமூலம் எடுப்பதற்கு முன்பு அவர் ஏதாவது சட்ட ஆலோசனைகள் தொலைபேசி மூலம் பெற விரும்பும் பட்சத்தில் அதற்குரிய தொடர்புகளையும் அதே காவல்நிலையத்திலிருந்து உருவாக்கி கொடுப்பார்கள்.
ஏழு நாட்களுக்கு வாகனம் பறிமுதலாகும். தொடர்ந்து ஏழு நாட்களின் பின்பு அதனை கட்டி இழுத்து சென்ற செலவுகள், பாதுகாப்பாக வைத்திருந்த செலவுகள் (Vehicle Towing & Storage charges) என அதற்கொரு கட்டணம் செலுத்தியே வாகனத்தினை வெளியே எடுக்கலாம்.
மதுபோதை முறிந்தவுடன் கைவிரல் அடையாளங்கள்,படங்கள் எடுத்துவிட்டு நீதிமன்றத்தில் ஆஜராகும் திகதி நிர்ணயம் செய்து விடுதலை செய்வார்கள்.
உடனடியாக அவரது வாகனமோட்டும் சாரதி அனுமதி பத்திரம் பறிமுதலாகும். சுமார் 90 நாட்களுக்கு பின்பு விரும்பினால் அதற்குரிய கட்டணம் செலுத்தி அந்த இழந்த லைசென்சினை நீதிமன்ற தீர்ப்பு வரும்வரை மீள் பெறலாம்.
தொடர்ந்து நீதிமன்றத்திற்கு ஆஜராகவேண்டும். பணம் செலுத்தி வக்கீலை ஒழுங்கு செய்யவேண்டும். குற்றம் உறுதிப்படுத்தும் நிலைமையில் அது முதல் தரமாக இருந்தால் நீதிமன்ற தீர்ப்பின்போது ஒரு வருடங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் பறிமுதலாகும். $1000 டொலருக்கு மேலாக பணதண்டனை கிடைக்கும். இது ஒரு கிரிமினல் குற்றமாக பதிவிலிருக்கும்.