Ads
கனடாவின் கரையோரப் பகுதிகளில் கடுமையான காற்று வீசும் என எச்சரிக்கை
கனடாவின் கரையோரப் பகுதிகளில் கடுமையான காற்று வீசி வருவதாகவும் தொடர்ந்தும் வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரையோரப் பிராந்தியங்களில் கடும் காற்று வீசியதனால் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. காற்று காரணமாக சுமார் ஐம்பதாயிரம் வாடிக்கையாளர்களின் மின்சாரம் தடைப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் மூன்று கரையோர மாகாணங்களிலும் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிக்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் என கனடிய சுற்றாடல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
பலத்த காற்று காரணமாக கட்டடங்களின் யன்னல்கள், கூரைகள் உள்ளிட்டனவற்றுக்கு சேதம் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. கடும் காற்றுடன் பலத்த மழை பெய்யும் சாத்தியங்களும் காணப்படுவதாகவும் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads