மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை பிடித்து கொடுக்கும் நிறுவனம். (MADD - MOTHERS AGAINST DRINK & DRIVERS )
MAAD - "MOTHERS AGAINST DRINK & DRIVERS " (மதுபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு எதிரான தாய்மார்கள்)
அந்த அமைப்பினை சுருக்கமாக "MADD" என குறிப்பிடப்படும்.
தமிழில் "விசர்" அல்லது "அதி உச்ச கோபம்" என அர்த்தப்படுத்தப்படும் இந்த நிறுவனம் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள்.
1980ம் ஆண்டு மே மாதம் 3ம் திகதி அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் தமது தாயின் முன்னால் வீதியோரமாக நின்றதொரு 13 வயது சிறுமி ஓர் மதுபோதை வாகன சாரதி ஏற்படுத்திய விபத்தால் அப்பாவித்தனமான முறையில் மரணமாகியதை தொடர்ந்து அந்த சிறுமியின் தாயான Ms. Candy Lightner என்ற பெண்மணியால் இதே நிலைமை இனிமேல் காலங்களில் சமூகத்தில் தொடரக்கூடாது என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இவ் நிறுவனம் (Non -profit charity organization ) புல் தரைபோல் படர்ந்து இன்று அமெரிக்கா, கனடா எங்கும் அரசுகளின் ஆதரவோடு மிக பாரிய அளவில் பரவலாக்கப்பட்டுள்ளது.
கனடாவில் அதன் தலைமையகம் பின்வரும் விலாசத்தில் இயங்குகின்றது.
MAAD CANADA - NATIONAL OFFICE
2010, Winston Park Drive , Suit # : 500
Oakville, Ontario L6H 6P5
Phone : 1-800-665-6233
* மதுபோதையில் வாகனம் செலுத்தக்கூடாது என்ற விழிப்புணர்வுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது.
* மதுபோதையில் வாகனம் செலுத்துவோரை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அந்தந்த நகரசபை,
மாகாண போலீஸ் பிரிவொடு சேர்ந்து இயங்குவது
இது குறித்து மேலும் விவரமாக தெரிந்து கொள்ள, கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோவை பாருங்கள். நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்,