கனடாவில் வீடுகளில் மரம் நடுதல் - எழும் சட்ட பிரச்சனைகள்
கனடாவில் உள்ள தங்கள் வீடுகளில் நிழல் தரும் பாரிய மரங்கள் நடுதல், பராமரித்தல், அவற்றினால் வரும் சில சட்ட பிரச்சனைகள் போன்ற தகவல்களை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
* தங்களின் வீடுகளுக்கு முன்னால், வீதி ஓரமாகவுள்ள நகரசபைக்கு சொந்தமான நிலத்தில் (Public road allowance land) ஏதாவது பாரிய நிழல் தரும் மரம் நாட்ட விரும்பினால் எந்த நகரசபையில் வசிக்கின்றீர்களோ அந்த நகரசபையின் வன வள பிரிவினருக்கு (City Urban Forestry Service) அழைத்தால் அந்தந்த மண் வளம், சூழல் சுற்றாடல்கள்,நிலத்தடி பாதுகாப்புகள் யாவற்றினையும் பரிசீலனை செய்து உகந்த மரங்களை இலவசமாகவே நாட்டிவிடுவார்கள். ரொறொன்டோ நகர எல்லைக்குள் உட்பட்ட இடமாகயிருந்தால் 311 என்ற இலக்கத்துக்கு அழைக்கலாம்.
* தங்களுக்கு சொந்தமான தங்கள் வீடு உள்ள பின் காணி எல்லையினுள் பாரிய நிழல் தரும் மரம் நாட்டவிரும்பினால் பின்வரும் நிறுவனத்துக்கு அழையுங்கள்.
LEAF - Local Enhancement & Appreciation of Forest
Phone : 416-413-9244
அரசின் அனுசரணையுடன் செயல்படும் லாபகரமற்ற இந்நிறுவனத்தில் (Non - Profit Organization) உள்ள துறைசார்ந்த நிபுணர்கள் தங்கள் காணியின் மண் வளம், நில வளம், நிலத்தடியின் கீழால் செல்லும் வாயு குழாய்கள் (Gas pipe lines) என்பவை பாதிக்காத நிலைமைகளை பரிசீலனை செய்து அந்த இடத்துக்கு உகந்த பாரிய நிழல் தரும் மரங்களை நாட்டி தருவார்கள். இதற்குரிய செலவுகளின் சிறு பகுதியினை மட்டும் தாங்கள் செலுத்தவேண்டும். மிகுதியினை ஓர் ஊக்குவிக்கும் மானியமாக நகரசபை கொடுத்து தீர்க்கும்.
(CITY SUBSIDIZED BACKYARD BACKYARD TREE PROGRAM)
தொடர்ந்து இதுகுறித்து விவரமாக தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பாருங்கள்.