கனடாவில் ஆயுள் காப்புறுதி. உயிர் இழப்பும், அந்திம சடங்கும் இன்னொரு நாட்டில்; காப்புறுதி பணம் கோருவது எப்படி?
கனடாவில் ஆயுள் காப்புறுதி வைத்திருக்கும் ஒருவரின் உயிர் இழப்பின் பின்பு குறிப்பிடப்பட்ட தொகை பணம் பெறுதல் என்பது கஷ்டமான விடயமல்ல.
ஆயுள் காப்புறுதியில் சேரும்போது அதி உச்ச நேர்மையாக, விசுவாசமாக எதுவிதமான மறைப்புகளுமின்றி தகவல்களை வழங்கி (Follow up at most good faith and loyal in the insurance agreements) சேர்ந்துகொள்ளுங்கள். செலுத்தவேண்டிய கட்டணங்களையும் தொடர்ந்து தவறாது செலுத்துங்கள்.
காப்புறுதி என்றுமே கைவிடாது. கனடாவின் சட்டங்களும்,நீதி துறையும் நியாங்கள் மீறப்படும்போது அந்த இடத்தில் உறுதியாக தட்டி கேட்கும். சேரும்போது நேர்மை தவறுவது, மாதா மாதம் பணம் செலுத்த தவறுவது போன்ற காரணகளினால் மட்டுமே காப்புறுதி உடன்படிக்கைளுக்கு ஆபத்துகள் வருவது வழமையாகும்.
கனடாவினுள் உயிர் இழப்பு நடந்தால், பணம் பெற உரித்துடையவர் கம்பனியின் பணம் கோரும் விண்ணப்பபடிவத்துடன், (Claim form) மரணசாசன பத்திரத்தினையும் (Death certificate) சேர்த்து அனுப்பி வைத்தால் மிக விரைவாக பணம் பெற உரித்துடையவரின் பெயரில் பணம் வந்து சேரும். உயிர் இழப்பு என்பது கனடாவினுள் நடந்திருப்பதால் அவை சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபணம் ஆவதால் அங்கு காலதாமதத்துக்கு இடமிருக்காது.
ஆனால், இதே உயிர் இழப்பு எங்கள் தாயக மண்ணிலோ அல்லது இன்னொரு நாட்டில் நிற்கும்போது நடந்து, அங்கு அவர்களின் மரணச்சடங்குகளும் முடிவடைந்திருந்தால், அது நிஜமான மரணம் என்பதனை கனடாவில் காப்புறுதி செய்த கம்பனிக்கு சந்தேகத்துக்கு அப்பால் நிரூபிப்பதில் பல படிமுறைகளை கடந்து வரவேண்டும்.
விவரமாக தெரிந்து கொள்ள கீழேகொடுத்துள்ள வீடியோவை பாருங்கள்.