Ads
டொரண்டோவில் மூடப்படும் கோவிட் தடுப்பூசி நிலையங்கள்
டொரண்டோவில் பெருந்தொற்று காலத்தில் இயங்கி வந்த தடுப்பூசி நிலையங்கள் முழுமையாக மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண அரசாங்கம் வழங்கி வந்த நிதியுதவிகள் நிறைவு பெறுவதாகவும் இதனால் குறித்த தடுப்பூசி நிலையங்கள் மூடப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நோர்த் யோர்க் சிவிக் சென்டர், கொல்வர்டேல் மோல், மெற்றோ ஹால் மற்றும் ஸ்காபரோ தடுப்பூசி நிலையம் ஆகியவை நிரந்தரமாக மூடப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
டொரண்டோ பொதுச் சுகாதார நிறுவனம் பெரும் எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Info
Ads
Latest News
Ads