கனடாவில் தவறவிடப்பட்ட உங்கள் பணம் உங்களை தேடுகின்றது. எப்படி தேடுகின்றது?
தவறவிடப்பட்ட உங்களுக்குரிய பணம், கனடாவின் தலைமை வங்கியிலிருந்து (Bank of Canada ) உங்கள் கைகளில் வந்து சேர்வதற்காக உங்களை தேடிக்கொண்டிருக்கின்றது.
இதனை சொல்லும்போது சில நேரங்களில் நம்புவது சிரமமாகயிருக்கும். இவ்வாறு தவறவிட்டவர் தாங்களாகவோ அல்லது தங்கள் மூதாதையர்களாகவும் இருக்கலாம். ஆனால் கனடாவின் தலைமை வங்கி தவறவிடப்பட்டவர்களின் பெயர்களினை அவர்களின் இணையதள பக்கங்களில் பகிரங்கப்படுத்தி அதனை தவறவிட்டவர்களோ அல்லது அவர்களின் சட்டரீதியான சந்ததியினரோ ஆதாரங்களை காட்டி பெற்றுக்கொள்ளுங்கள் என அறிவித்து வருகின்றனர். இதனை எப்படி அதற்கு உரித்துக்குரியவர்கள் பெறுவது என்ற விபரங்களும் அங்கு தெளிவாக வழிகாட்டபட்டுள்ளது. அல்லது நேரடியாக தங்கள் வங்கிகளை அணுகினாலும் வழி காட்டுவார்கள்.
"UNCLAIMED BANK BALANCE - BANK OF CANADA " என்ற பெயரில் Google பண்ணி, தேடப்படும் பெயரினை அங்கு பதிவிலிடுங்கள். குறிப்பிடப்பட்ட பெயரில் பணம் ஏதாவது கோரப்படாத நிலையில் இருந்தால் முன்னர் அவர்களின் பெயர்கள், விபரங்களுடன் சரியான தொகை எவ்வளவு என்பதும் வெளியிடப்பட்டிருந்தது.ஆனால் இப்போது அவர்களின் பெயர்களுடன், $100 டாலருக்குள், $500 டாலருக்கு மேல் என மட்டுமே தொகைகள் பகிரங்கத்துக்கு வெளியிடப்படுகின்றது. எவ்வளவு தொகை என்பது அதனை கோரும் உரிமைக்குரியவர், சட்ட ரீதியாக கோரும்போது அறிந்துகொள்ளமுடியும்.
விலாசம் மாறியவர்கள், வயோதிப மறதியில் இருப்பவர்கள், மரணமாகியவர்கள், மரணமாகிய பின்பு அவை பற்றி முறையே அறிவிக்க தவறும் நிலைமைகளில் வங்கி கணக்குகளில் மாதா மாதம் வைப்பிலிடப்படும் அரச கொடுப்பனவுகள், ஏதாவது தொழில் செய்த இடங்களில் உருவாக்கப்பட்ட ஓய்வூதிய முதலீட்டு திட்டங்கள் (Employer contributed pension plans), இப்படி பல அம்சங்களை தவறவிடப்பட்ட பணத்திற்கு உதாரணமாக சொல்லலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவினை பார்த்து இரு நிமிடங்களில் இந்த தகவலை முழுமையாக அறிந்துகொள்ளுங்கள்.