வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யும் தொழிலில் லீவு | Domestic violence leave
கனடாவில் தொழில் செய்பவர்கள் சம்பளத்தோடு லீவுகள், சம்பளம் இல்லாத லீவுகள் என பல லீவுகள் எடுக்கும் சட்டமூலங்கள் இருந்தாலும் அண்மையிலிருந்து கனடிய அரசு புதியதோர் லீவு எடுக்கும் சலுகையினை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
தொடர்ந்து 13 கிழமைகளுக்கு மேலாக கனடாவில் தொழில் செய்து வரும் ஒருவர், ஏதாவது துரதிர்ஷ்டவசமாக குடும்பத்தினுள் நடக்கும் வன்முறைகள் (Any domestic violence) உட்பட எந்த ஒரு வன்முறைகளாலும் அவரோ அல்லது அவரின் 18 வயதுக்கு உட்பட்ட பிள்ளை ஒன்றோ உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம்.
அப்படியான பாதிப்புகளை தொடர்ந்து அவர்கள் தங்களின் உடல்,உள மருத்துவ சிகிச்சைகள், உளவியல் ஆலோசனைகள் பெறுதல் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு சேவைகள் வழங்கும் நிறுவனங்களை அணுகுதல், சட்ட ரீதியான நீதிமன்ற அலுவல்களை மேற்கொள்தல்,தற்காலிக இடப்பெயர்வு போன்ற தேவைகளுக்காக செய்யும் தொழிலில் லீவு எடுக்கவேண்டிய நிலைமைகள் ஏற்படலாம்.