ஆலோசனையும், ஒத்துழைப்பும் தேவை என பழனிசாமிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி 150க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது. தமிழகத்தில் புதிய அரசு அமைய உள்ளது. இதையொட்டி, திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ஸ்டாலின், “மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை! ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்!,” எனக் குறிப்பிட்டுள்ளார்.