Category:
Created:
Updated:
சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், நாளை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க.தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி 150க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது. ஸ்டாலின் தலைமையில் புதிய அரசு அமைய உள்ளது. சென்னை அறிவாலயத்தில் நாளை மாலை 6 மணிக்கு திமுக எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் திமுக சட்டமன்ற குழு தலைவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்.
ஆட்சியமைக்க ஸ்டாலின் உரிமை கோர இருக்கிறார். இதைத் தொடர்ந்து, ஆளுநர் அழைத்த பிறகு கொரோனா பரவல் காரணமாக மே 7ம் தேதி எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.