தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?
தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
வாக்குப்பதிவு முடிவடைந்ததும் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டு உள்ளன. அறைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் 75 மையங்களில் எண்ணப்படுகின்றன. இதற்காக தலைமை தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் 500 தபால் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணிக்கு மின்னணு எந்திரங்களில் பதிவாகி உள்ள வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும்.
நாளை பிற்பகலில் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது தெரிந்து விடும். 20 முதல் 44 சுற்றுகள் வரை ஓட்டு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் நள்ளிரவு வரை ஓட்டு எண்ணிக்கை நடைபெற வாய்ப்பு உள்ளது. எனவே முழு விவரங்கள் திங்கட்கிழமை அதிகாலை தான் தெரிய வரும்.