கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்பாசனக் குளமான இரணைமடுக் குளத்தின் கீழ் இவ்வாண்டு சிறுபோகத்தில் பதிமூவாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது
கிளிநொச்சி மாவட்டத்தின் சுமார் 36 அடி நீர் கொள்ளளவை கொண்ட பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடுக்குளத்தில் தற்போது 30அடி தண்ணீர் மாத்திரமே அதாவது எண்பத்தி ஒராயிரத்து164 ஏக்கர் அடி தண்ணீர் உள்ளது.
இந்த நிலையில் திருவையாறு ஏற்று தீர்ப்பாசனத்திட்டம் மாவட்டத்திற்கான குடிநீர் விநியோகம் நன்னீர் மீன்பிடி மற்றும் வெப்பத்தினால் ஆவியாகுதல் என்பவை தவிர மீதமாகவுள்ள 59ஆயிரம் ஏக்கர் கன அடி தண்ணீரை மாத்திரமே சிறு போக விவசாயத்திற்கு பயன்படுத்தமுடியும் என்பதால் குறித்த நீர் கொள்ளளவை வைத்து இவ்வாண்டு பதிமூவாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையும் 1500 ஏக்கர் மேட்டுநிலச் செய்கையும் மேற்கொள்ளப்படவுள்ளது.இது தொடர்பிலான பயிர்ச் செய்கை கூட்டம் நேற்று (20-03-2023) பகல் மணிக்கு கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தியில் அமைந்துள்ள திட்ட முகாமைத்துவ குழு அலுவலகத்தில் மாவட்ட பயிர்செய்கை குழுவின் தலைவரும் மாவட்ட அரச அதிபருமான ரூபவதி கேதீஸ்வரன் தலைமiயில் நடைபெற்றுள்ளது நடைபெற்றுள்ளது.மேற்படி கலந்துரையாடலில் இவ்வாண்டு சிறுபோக செய்கையை முன்னெடுப்பதற்கு ஏற்ற விதமான சகல நடவடிக்கைகளையும் துறைசார் திணைக்களங்களின் தலைவர்கள் ஒத்துளைப்புகளை வழங்கி சிறுபோக செய்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் உரிய காலத்தில் பயிர் செய்கைகளை மேற்கொள்வதுடன் கால்நடைக் கட்டுப்பபாடு நீர்முகாமைத்துவம் பயிர் காப்புறுதி உரம் உள்ளிட்ட விவசாய உள்ளீடுககளின் விநியோகம் என்பன தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.குறித்த கூட்டத்தில்; மேலதிக அரச அதிபர் இரனைமடு நீர்ப்பாசன பொறியியலாளர் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் துறை சார்ந்த திணைக்களங்களின் பதவி நிலை உத்தியோகத்தர்கள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.