கிளிநொச்சி மாவட்டத்தில் இடப் பெயர்வுகள் மற்றும் மீள் குடியமர்வின் பின்னரான செயற்பாடுகளில் அதிக அளவில் காணிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் ஒரு மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம்
கிளிநொச்சி மாவட்டத்தில் இடப் பெயர்வுகள் மற்றும் மீள் குடியமர்வின் பின்னரான செயற்பாடுகளில் அதிக அளவில் காணிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் ஒரு மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் காணப்படுகின்றது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற அரச காணிகள் தொடர்பான இலவச சட்ட உதவ நடமாடும் சேவையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கன்ட வாறுதெரிவித்துள்ளார்தொடர்ந்து உரையாற்றுகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் இடப் பெயர்வுகள் மற்றும் மீள் குடியமர்வின் பின்னரான செயற்பாடுகளில் அதிக அளவில் காணிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் ஒரு மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டம் கானப்படுகின்றது.
இவ்விதமான பிரச்சினை மக்களிடையே பாரிய ஒரு பிரச்சனையாகவும் மாறியுள்ளது பல்வேறு வேலை திட்டங்களின் ஊடாக மக்களின் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கி உள்ளபோதும் இன்னும் பல பிரச்சினைகள் தீர்க்க முடியாத நிலையில் காணப்படுகின்றன.
அதிலும் சட்ட ஏற்பாடுகள் சட்டம் சார்ந்த இருக்கக்கூடிய பிரச்சனைகளால் மக்கள் திருப்தியடையக்கூடிய பதில்களை வழங்க முடியாத நிலை காணப்படுகிறதுஇவ்விதமான பிரச்சனைகளுக்கு சட்ட உதவிகளை பெற வேண்டிய தேவை மக்களுக்கு உள்ளது இவ்வாறானவர்களுக்கு இது போன்ற சட்ட உதவிகளை வழங்குவது மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அரச காணிகள் தொடர்பான இலவச சட்ட உதவி முகாம் இன்று (18-03-2023) நடைபெற்றுள்ளதுஇலங்கை சட்டக்கல்லூரி மாணவர்கள் இந்து மகாசபை ஏற்பாட்டிலான அரச காணிகள் தொடர்பான இலவச சட்ட உதவி முகாம் இன்று பகல் கிளிநொச்சி மாவட்ட திறன்விருத்தி மண்டபத்தின் நடைபெற்றுள்ளது.
இதில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சட்ட ஆலோசனைகள் தொடர்பான இலவச முகாமினை ஆரம்பித்து வைத்தார் தொடர்ந்து சட்டக் கல்லூரி மாணவர்களால் அரச அதிபருப்பான நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி பாரதி சட்டவரைஞர் திணைக்களத்தின் பிரதி சட்டவரைஞர் செல்வ குணபாலன் இந்து மகா சபையின் சட்ட மாணவர்கள் பொதுமக்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.