அச்சுவேலி தெற்கு நாவல் காட்டுப் பகுதியில் ஹயஸ் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதல்
யாழ்ப்பாணம் பருதித்துறை பிரதான வீதியின் அச்சுவேலி தெற்கு நாவல் காட்டுப் பகுதியில் ஹயஸ் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஓட்டுனர் உட்பட ஒருவர் காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிசார் தெரிவித்தனர்.ஆவரங்கால் மேற்கு பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களை இவ்வாறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வீதியின் அருகில் இருந்து பிரதான வீதிக்கு ஏற முற்பட்ட ஹயஸ் வாகனத்துடன் மோதி இவர்கள் விபத்துக்குள்ளாகுள்ளனர்.அதிக வேகமே இந்த விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். குறித்த நபர்கள் விபத்தினை தடுக்க முடியாத அளவுக்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விபத்துடன் தொடர்புபட்ட வாகனத்தின் சாரதி அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.சாரதி ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.