
அட்லீ இயக்கும் புது படத்தில் இணைகிறார் தீபிகா படுகோனே
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான அட்லீ ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்ததால் அட்லீ பான் இந்தியா இயக்குனராக உருவெடுத்துள்ளார். தற்போது அவர் தெலுங்கின் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். பெயரிடப்படாத இந்த படம் AA22xA6 என அழைக்கப்பட்டு வருகிறது.
முதல்முறையாக அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ இயக்கும் இந்த பிரம்மாண்ட படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த புதிய படத்தின் பட்ஜெட் ரூ.600 கோடி என கூறப்படுகிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோனேவை நடிக்க வைக்க தீவிர பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என்று தகவல் வெளியானது.
நடிகர் பிரபாஸுடன் ‘ஸ்பிரிட்’ என்கிற படத்தில் நடிக்க இருந்த தீபிகா படுகோன் சில காரணங்களால் அந்தப் படத்தில் இருந்து விலகி இருக்கிறார். எனவே தீபிகா படுகோன் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது. AA22xA6 படத்தின் படப்பிடிப்புகள் வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்கும் என்றும், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிட அட்லீ திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva