எழவே முடியாத அளவிற்கு அடிவாங்கியது லைகா நிறுவனம்
லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமானது சுபாஸ்கரன் அல்லிராஜா என்பவருக்கு சொந்தமான திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். சமீப காலமாக லைகா ப்ரோடக்ஷன்ஸ் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. இந்த வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக லைகா ப்ரோடக்ஷன் தயாரித்த சில பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியைத் தழுவின ‘லால் சலாம்’, ‘இந்தியன் 2’, ‘சந்திரமுகி 2’, ‘விடாமுயற்சி’, ‘வேட்டையன்’ போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறாதது நிறுவனத்திற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது.
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்குப் பதிலாக, வெறும் நட்சத்திர அந்தஸ்தை மட்டுமே நம்பி அதிக பட்ஜெட் படங்களை லைகா நிறுவனம் தேர்ந்தெடுத்தது. இதுவும் லைகாவின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்திருக்கலாம். லைகா நிறுவனம் மிகவும் நம்பி இருந்த ‘பொன்னியின் செல்வன் 2’ எதிர்பாராத அளவு வசூலிக்காது நிறுவனத்திற்கு மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது
ஒரே நேரத்தில் பல பெரிய படங்களை தயாரிப்பதில் நிறுவனம் அகலக்கால் வைத்ததாக கூறப்படுகிறது. பெரிய நிறுவனமாக இருந்த போதிலும் இவ்வளவு பெரிய முதலீடுகளை ஒரே நேரத்தில் கையாள கையாள முடியாத நிலை ஏற்பட்டது. இது மட்டுமில்லாமல் உள்நாட்டு நிதி நிறுவனங்களிலிருந்து கடன் பெறுவதில் சிக்கல்கள், லண்டனில் உள்ள பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் ஏற்பட்ட சிரமங்கள் ஆகியவை லைகா நிறுவனை கடும் நிதி நெருக்கடியில் தள்ளின.
லைகா மொபைல்ஸ் நிறுவனம் பல்வேறு நாடுகளில் வரி ஏய்ப்பு மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகளில் சிக்கியது. பிரான்சில் 2023-ல் பண மோசடியில் முக்கிய வழக்கில் இந்த நிறுவனத்திற்கு 10 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. இந்திய அமலாக்கத்துறை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அலுவலகங்களில் சோதனை நடத்தி சட்டவிரோத கடன்கள் மற்றும் முதலீடுகள் தொடர்பான ஆதாரங்களை கைப்பற்றியது. இந்த சட்ட பிரச்சனைகளும் லைகாவின் நிதி நிலையை கடுமையாக பாதித்துள்ளன.
பொருளாதார சிரமங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்துள்ள லைகா மீண்டும் பட தயாரிப்பை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெறுவதாகவும், விரைவில் புதிய படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva