Category:
Created:
Updated:
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்கள் பரவும் ஆபத்து அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரித்துள்ளனர்.
லேடி ரிட்ஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் இளம்பிள்ளைகள் நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா, மழையுடனான வானிலையால், ஆபத்தான நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
காய்ச்சல், கடுமையான மூட்டு வலி, சில சந்தர்ப்பங்களில் மூக்கில் கறுப்பு புள்ளிகள் தென்படல் போன்ற ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்
00