
இலங்கை சினிமாவின் இராணி மாலினி பொன்சேகா காலமானார்
இலங்கை சினிமாவின் ராணி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற நடிகை மாலினி பொன்சேகா இன்று (24) காலை காலமானார்.
அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலமானார்.
ஏழு தசாப்தங்களாக நடித்து வந்த மூத்த நடிகையான இவர், 1968 இல் திஸ்ஸ லியன்சூரியவின் “புஞ்சி பபா” என்ற திரைப்படத்துடன் இலங்கைத் திரைப்படத்துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து பல்வேறு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.
2010 ஆம் ஆண்டில், ஆசியாவின் 25 சிறந்த திரைப்பட நடிகர்களில் ஒருவராக சி.என்.என் ஊடகத்தால் பெயரிடப்பட்டார்.
1978 ஆம் ஆண்டு பைலட் பிரேம்நாத் தமிழ்த் திரைப்படத்தில் சிவாஜி கணேசனுடன் இணைந்து கதாநாயகியாக நடித்தார்.
அத்துடன் யார் அவள் (1976), மல்லிகை மோகினி (1979), பனி மலர் (1981) ஆகிய தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
ஏப்ரல் 2010 இல், மாலினி பொன்சேகா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்.
000