Ads
நாகாலாந்து சட்டமன்ற வரலாற்றில் வெற்றி பெற்ற முதல் பெண் எம்.எல்.ஏ.
நாகலாந்து மாநில சட்டசபை தேர்தலில் இதுவரை ஆணாதிக்கம் மட்டுமே இருந்த நிலையில் தற்போது முதல் முறையாக ஒரு பெண் தேர்தலில் ஹேக்கானி ஜக்காலு என்ற பெண் வேட்பாளர் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகலாந்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து ஹேக்கானி ஜக்காலுசெய்தியாளர்களிடம் பேசிய போது நாகலாந்தில் உள்ள ஆணாதிக்க மனநிலை தற்போது மாறியுள்ளது என்றும் இனி பெண்களும் அதிக அளவு அரசியலுக்கு வருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்
இந்த நிலையில் நாகலாந்து மாநிலத்தின் முதல் பெண் எம்எல்ஏவான ஹேக்கானி ஜக்காலு அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நாகலாந்து மாநில சட்டமன்றத் தேர்தல் வாக்குகள் எண்ணும் பணி கடந்த சில மணி நேரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை வந்த தகவலின் படி பாஜக 39 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
Info
Ads
Latest News
Ads