Ads
இந்தியாவில் 1901ஆம் ஆண்டுக்கு பிறகு அதிக வெப்பம் பதிவு
இந்தியாவில் கடந்த 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் எனவே இந்த ஆண்டு கோடை முன்கூட்டியே தொடங்கி விட்டதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கும் என்றும் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நூறு வருடங்களுக்கு பின்னால் பிப்ரவரி மாதத்தில் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளதை அடுத்து இந்த ஆண்டு கோடை கொடூரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மார்ச் முதல் மே வரையிலான காலகட்டத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads