Ads
மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா சமீபத்தில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது ஜாமின் மனு விசாரணை என்ற உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. டெல்லியில் கலால் கொள்கையை உருவாக்கி அதில் மோசடி செய்ததாக துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதனை அடுத்து அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நிலையில் அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் மணீஷ் சிசோடியாதரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தலையிட மறுப்பு தெரிவித்ததோடு டெல்லி உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி உள்ளது. டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடாமல் நேரடியாக உச்சநீதிமன்றத்தை அணுகியது தவறு என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்
Info
Ads
Latest News
Ads