Ads
கொரோனா அதிகரிப்பு - சுகாதார பிரிவுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (23) நடைபெற்ற கொவிட் தொற்று பரவலைத் தடுக்கும் ஜனாதிபதி செயலணி கூட்டத்தில் நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் தொடர்பில் தீர்மானங்கள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைவாக அனர்த்தநிலை தொடர்பில் பொதுக்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கு விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி சுகாதார பிரிவுக்கு அறிவித்துள்ளார்.
எந்த வகையிலும் நாட்டை முடக்குவதற்கும், அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ளாது வரையறுப்பதற்கும் தீர்மானம் மேற்கொள்ளவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும் பொதுமக்கள் ஒன்றுகூடும் வைபவங்களை வரையறுக்குமாறு ஜனாதிபதி சுகாதார பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
Info
Ads
Latest News
Ads