விளையாட்டுத்துறை அமைச்சரின் கோரிக்கை
விளையாட்டு அரங்கு, உடற்பயிற்சி மத்திய நிலையங்களை பதிவு செய்வதற்கும், நடத்துவதற்கும் அனுமதி பத்திரத்தை வழங்குவது அத்தியாவசியமாகும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதுவரையில் இந்த மத்திய நிலையங்களை ஆரம்பித்து நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தினால் எந்தவித வழிகாட்டிகளும் அறிவிக்கப்படவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சௌபாக்கிய தொலைநோக்கு தேசிய கொள்கையின் கீழ் ஆரோக்கியமான இளைஞர் சமூகத்தை உருவாக்குவதே இதன் அடிப்படை நோக்கமாகும் என்றும், இதனை புதிய தொழில்துறையாக அடையாளம் காணமுடியும் என்றும் அமைச்சர் கூறினார். இளம் சமூகத்தினருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்க இதன்மூலம் முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கமைவாக விளையாட்டுத்துறை சட்ட விதிகள் தொடர்பில் கவனம் செலுத்தி விளையாட்டு அரங்கு மற்றும் உடற்பயிற்சி மத்திய நிலையங்களுக்கான ஆலோசனைகள் வழிகாட்டி துரிதமாக தயாரிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
கொவிட் - 19 வைரஸ் தொற்று பரவலை தவிர்ப்பதற்காக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைக்கு அமைவாக இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.