தினேஷ் கார்த்திக் உடன் சேர்ந்து ருத்ர தாண்டவம் ஆடியா அந்த்ரே ரஸல் - ஒரு வழியா வெற்றி பெற்ற சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின், சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் குவித்தது. பின்னர் 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.1 ஓவரில் 202 ரன்கள் எடுத்த நிலையில் ஆல்-அவுட் ஆனது. 3வது வெற்றியைப் பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
பக் சாஹர் முதல் 3 ஓவரில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார். 31 ரன்னுக்குள் ஐந்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை இழந்த கொல்கத்தா கதி அவ்வளவுதான் என நினைக்கும்போது, ஐந்தாவது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக் உடன் ஜோடி சேர்ந்த அந்த்ரே ரஸல் ருத்ர தாண்டவம் ஆடினார். இதனால் கொல்கத்தா 10.1 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. அந்த்ரே ரஸல் 21 பந்தில் 3 பவுண்டரி, 6 சிக்சருடன் அரைசதம் விளாசினார். 12-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் அந்த்ரே ரஸல் அஜாக்ரதையாக போல்டானார்.
தொடர்ந்து, தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 24 பந்தில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் பேட் கம்மின்ஸ் வாணவேடிக்கை நிகழ்த்தினார். சாம் கர்ரன் வீசிய ஒரே ஓவரில் நான்கு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 30 ரன்கள் அடித்தார் . அசுரத்தனமாக ஆடியா பேட் கம்மின்ஸ் 34 பந்தில் 4 பவுண்டரி, 6 சிக்சருடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.