Ads
கடுமையாக்கப்படும் தனிமைப்படுத்தல் நடைமுறை – சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை
இலங்கையில் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் பல முடிவுகளை அறிவித்துள்ளனர்.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தலைமையில் இடம்பெற்ற விசேட சந்திப்பில் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
- சிகிச்சை நிலையங்கள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் கோவிட் நோயாளிகளுக்கு தேவையான ஒக்ஸிஜனை வழங்குதல்
- வைத்தியர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்
- கோவிட் நோயாளிகளை நோய்த்தொற்றின் அளவின் அடிப்படையில் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்க ஒரு அமைப்பை உருவாக்குதல்
- கோவிட் சிகிச்சைக்காக பகுதி மற்றும் மாவட்ட ரீதியில் மருத்துவமனைகளை அமைத்து அவற்றுக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குதல்
- மருத்துவமனைகளில் கோவிட் நோயாளிகள் மற்றும் சாதாரண நோயாளிகளுக்கு இணையான சிகிச்சையை உறுதி செய்தல்
- ஒரு நாளைக்கு நடத்தப்படும் பி.சி.ஆர் சோதனைகளின் எண்ணிக்கையை குறைந்தது 15,000 ஆக உயர்த்தல்
- தனிமைப்படுத்தல் நடைமுறைகளை கடுமையாக அமுல்படுத்துதல் மற்றும் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தல்
- வெளிநாடுகளில் இருந்து திரும்பும் மக்களுக்கு விசேட தனிமைப்படுத்தல் சட்டத்தை உருவாக்குதல்
இவ்வாறான முடிவுகள் குறித்த கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.
Info
Ads
Latest News
Ads