நாட்டை அடிமைத்தனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சி- சஜித்
நமது நாட்டை அடிமைத்தனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் துறைமுக நகர செயல்முறையை நாங்கள் எதிர்க்கின்றோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
துறைமுக நகர திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சஜித் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த திட்டத்தின் ஊடாக நிதி பிரிவினைவாதம், பொருளாதார பயங்கரவாதம் மற்றும் பொருளாதார பிரிவினைவாதத்தை செயற்படுத்தவே தற்போதைய அரசாங்கம் முயன்று வருகின்றது.
மேலும் எங்களது 22 மில்லியன் மக்களை மூன்றாம் வகுப்பு குடிமக்களாகக் கருதுவதற்கும், வெளிநாட்டு குடிமக்களுக்கு சாதகமாக இருப்பதற்கும் ஏற்றவகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் காணப்படுகின்றது.
இவ்வாறு நமது தாய்நாட்டை அடிமைத்தனமாக மாற்றுவதற்கு இந்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் துறைமுக நகர செயல்முறையை நாங்கள் நிராகரிக்கிறோம்.
நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் இவ்விடயம் தொடர்பில் உண்மைகளை முன்வைப்போம், இந்த இழிவான நடைமுறையை தோற்கடிக்க நடவடிக்கை எடுப்போம்” என சஜித் குறிப்பிட்டுள்ளார்.