5 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை மற்ற நாடுகளுக்கு பரிசளிப்பதில் என்ன பயன்?
பஞ்சாப் மாநில முதல் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அம்ரீந்தர் சிங் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அம்ரீந்தர் சிங் பேசியதாவது,
5 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை மற்ற நாடுகளுக்கு பரிசளிப்பதில் என்ன பயன்? நமது நிலைமை என்ன? இந்தியர்களின் நிலை என்ன? முதலில் நமக்கு தடுப்பூசி வேண்டாமா? நம்மிடம் அதிகமாக தடுப்பூசி இருந்தால் அவற்றை வெளிநாடுகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று நான் கூறவில்லை.
ஆனால், நம்மிடம் குறைவாக தடுப்பூசி இருக்கும்போது அவற்றை மற்றவர்களுக்கு நல்லெண்ண அடிப்படையில் கொடுக்கக்கூடாது முதலில் இந்தியர்களுக்கு கொடுக்க வேண்டும். முதலில் எனக்கு கொரோனா தடுப்பூசி கொடுங்கள் என்று மாநில முதல் மந்திரிகளுடனான கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் நான் இவ்வாறு கூறினேன்’ என்றார்.
உலகின் பல நாடுகளுக்கு இந்தியா லட்சக்கணக்கான கொரோனா தடுப்பூசிகளை நல்லெண்ண அடிப்படையில் இலவசமாக வழங்கியது. ஆனால், தற்போது உள்நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.