இளவரசர் பிலிப் இறுதிச் சடங்கில் கவுரவ உடையை அணிவது யார்?
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வாரம் வியாழக்கிழமை உயிரிழந்தார். 99 வயதான அவரின் உடல் நாளை மறுநாள் (சனிக்கிழமை- ஏப்ரல் 17-ம் தேதி) நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இங்கிலாந்து ராணியின் குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்கின்போது, குடும்பத்தில் உள்ள ஒருவர் ராணுவ உடை அணிந்து செல்வர். இது பராம்பரிய நிகழ்வாக இருந்து வருகிறது. இவர் அவர்கள் வைத்திருக்கும் கவுரவ டைட்டிலை பிரதிபலிக்கும்.
இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கின்போது ஹாரி அல்லது 61 வயதான ஆண்ட்ரூ ஆகியோரில் ஒருவர்தான் ராணுவ ஆடையை அணிய வேண்டும் என இங்கிலாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹாரி ஆப்கானிஸ்தான் போரின்போது இங்கிலாந்து படையுடன் இணைந்து செயல்பட்டவர். அதேபோல் ஆண்ட்ரூ 1982-ம் ஆண்டு பால்க்லாந்து தீவி பிரச்சினையின்போது பணிபுரிந்தவர்.
ஹாரி, தனக்கு அரச குடும்பத்தின் மரியாதை ஏதும் வேண்டாம் என அவரது மனைவியுடன் இங்கிலாந்தில் இருந்து வெளியேறிவிட்டார். ஆண்ட்ரூ, ஒரு விவகாரத்தில் அரசு குடும்ப பொது வாழ்க்கையில் இருந்து விலகிக்கொண்டார்.
அரசு குடும்பத்தின் அனைவரும் மவுன அஞ்சலிக்கான அந்த உடையை அணிவார்கள் என்று ராணி முடிவு எடுத்துள்ளதாக மற்றொரு ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.