கிளிநொச்சி மருத நகரில் அமைந்துள்ள முருகேசு முன் பள்ளியில் நடைபெற்ற சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு
எங்களது முதியோர்களையும் பெற்றோர்களையும் போற்றிக் கனம் பண்ண வேண்டியதோடு மட்டும் நின்று விடாது அவர்களது போசாக்கு விடையங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றுாபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்கிளிநொச்சி மருத நகரில் அமைந்துள்ள முருகேசு முன் பள்ளியில் இன்று ((13-10-2022) பிற்பகல் நடைபெற்ற சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.தொடர்ந்து உரையாற்றுகையில் குறிப்பாக கடந்த காலங்களில் நாங்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு கொண்டோம் அதாவது கொவிட் -19 தொற்றுக்குள் இருந்து விடுபட்டு வெளியில் வந்தவர்களாக இருந்தாலும் தற்போது பொருளாதார சிக்கல்களுக்கு உட்பட்டவர்களாக இருக்கின்றோம் இன்றைய தினத்திலே இந்த முதியவர்கள் கலைநிகழ்வுகளில் ஆர்வமாக இருந்ததையும் நான் அவதானிக்க கூடியதாக இருந்தது.எங்களது பெற்றோர்களை எங்களது முதியோர்களை போற்றி கனம் பண்ண வேண்டும் இத்தோடு மட்டும் நின்று விடாது அவர்களது போசாக்கு விடயங்களில் கவனம் எடுக்கும் வகையிலே இப்போது இருக்கின்ற உணவு நெருக்கடிகளை சமாளிக்கும் விதத்தில் உற்பத்திகளையும் மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சிம மருதநகர் பகுதியில் அமைந்துள்ள முருகேசு முன் பள்ளி மைதானத்தில் மேற்படி சிறுவர் மற்றும் முதியோர் தின நிகழ்வு இன்று பிற்பகல் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.முருகேசு முன் பள்ளி ஆசிரியர் ரஜினி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றுாபவதி கேதீஸ்வரன் அவர்களும் கொடையாளரும் S.V.M. ENTERPRISE பிறைவேட் லிமிடற் உரிமையாளருமான எம் குணரட்னம் கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர் ஜெயந்தி தனபால சிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முதியோர்கள் சிறுவர்களுக்கான பரிசில்களை வழங்கி மதிப்பாளித்தனர்.