யாழ்ப்பாணத்தில் வாடிவீடுகளை அபிவிருத்தி செய்ய தீர்மானம்
யாழ்ப்பாணத்தில் வாடிவீடுகளை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் வாடிவீடுகளை, அபிவிருத்தி செய்யும் நகர மயமாக்கல் அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்று(10) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தன் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு
நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான இல. 09 காரைத்தீவு வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள காணி, வாடிவீடுகள் அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 30 வருட குத்தகையின் அடிப்படையில் கிரான்ட் மவுன்டன் ஹோட்டல் கம்பனிக்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஏற்புடைய நிபந்தனைகளுக்கமைய குறித்த காணியை கிரான்ட் மவுன்டன் (தனியார்) கம்பனிக்கு வாடிவீடுகள் அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடை முறைப்படுத்துவதற்காக முப்பது (30) வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.