இந்த நாட்டை எதிர் காலத்தில் பொறுப்பேற்று வழிநடத்த வேண்டிய இளம் சமூகத்தினர் போதைப் பொருளுக்கு அடிமைகளாகி தங்களது எதிகாலத்தை சிதைக்கின்றனர் என வடமாகான சிரேஸ்ர பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீர சூரிய தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி மாவட்டத்தின் இராமநாதபுரம் பகுதியில் இயங்கி வந்த போலீஸ்காவலரணை கடந்த வெள்ளிக்கிழமை போலீஸ் நிலையமாக தரமுயர்த்தி வைத்து உரையாற்றும் போது தெரிவித்துள்ளார் தொடர்ந்து உரையாற்றுகையில் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சூழ்நிலை காரணமாக போலீஸ்மா அதிபர் அவர்கள் புதிய போலிஸ் நிலையங்களை அமைப்பதற்குரிய வேலைத்திட்டங்களை கடந்த இரண்டு வாரங்களாக நிறுத்தி வைத்திருந்தார் இந்த பிரதேச மக்களினுடைய கோரிக்கைகளையும் அந்த மக்களின் தேவைகளையும் உணர்ந்து இந்த பகுதிக்கு ஒரு போலீஸ் நிலையம் தேவை என்பதை உணர்ந்து நான் நேரடியாக போலீஸ்மா அதிபர் அவர்களுடன் கலந்துரையாடி இந்த போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டிருக்கின்றது.நான் இந்த பிரதேசத்தின் குற்றங்கள் மற்றும் மக்களின் கோரிக்கைகள் மக்களின் தேவைகள் என்பவற்றை கேட்டறிந்து கொண்டுதான் இருக்கின்றேன். வடமாகாணத்திலே 60 போலீஸ் நிலையங்கள் இப்பொழுது இருக்கின்றன 61வது போலீஸ் நிலையமாக இந்த போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த பிரதேசத்தை சேர்ந்த ஐந்து கிராம அலுவலர் பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கான சேவைகளை வழங்குகின்ற ஒரு போலிஸ் நிலையமாக இந்த போலீஸ் நிலையம் அமைந்திருக்கும் கிளிநெச்சி மாவட்டத்திலுள்ள போலீஸ்லயங்களை அவதானித்து வருகின்றேன் இந்த பிரதேசங்களிலே அதிக அளவிலே 16 வயதுக்கு உட்பட்ட பெண் பிள்ளைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.சில குற்றச்செயல்களை பார்க்கும்போது இது மனிதனால் செய்யக்கூடிய குற்றங்களா? என்று கூட எண்ணத் தோன்றுகின்றது அத்துடன் போதைப் பொருள் தொடர்பில் பல்வேறு சுற்றி வளைப்புகளை தொடர்ந்து செய்தாலும் அது அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.இந்த நாட்டினை எதிர் காலத்தில் பொறுப்பேற்று வழிநடத்த வேண்டிய இன்றை இளம் சமூகத்தினர் போதைப் பொருளுக்கு அடிமையாகி தங்களது எதிர் காலத்தை அழித்துக் கொள்கின்றார்கள் இதிலிருந்து விடுபட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் வட மாகானத்தில் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு ஏற்ற வகையிலே கடந்த காலங்களிலே தமிழ் போலீசார் இல்லை என்ற குறைபாடுகள் காணப்பட்டிருந்தன.இப்போது வட மாகாணத்திலே 700 தமிழ் பெலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையிலே ஈடுபட்டிருக்கின்றார்கள். அதே போல 700 வரையான சிங்கள சிங்கள போலீசார் தமிழ் மொழியை கற்று சேவைகளை வழங்கி வருகின்றார்கள் பொலிசாரின் சேவைகள் மக்களுக்கு சரியாக கிடைக்கவில்லை என்றால் இது தொடர்பில் உடனடியாக தனக்குத் தெரியப்படுத்தும் பட்சத்தில் அவற்றை கண்காணித்து சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கும் பொது மக்களினுடைய ஒத்துழைப்பும் அவசியம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.