Ads
தமிழகத்தில் மேலும் 941- பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் இன்று புதிதாக 941 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 202 பேர், கோவையில் 107 பேர், செங்கல்பட்டில் 83 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆஸ்பத்திரியில் 441 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளாகி 8 ஆயிரத்து 911 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 3 ஆயிரத்து 244 பேரும், கோவையில் 868 பேரும், செங்கல்பட்டில் 670 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Info
Ads
Latest News
Ads