வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி 100 நாட்கள் கவனயீர்ப்பு போராட்டத்தின் இரண்டாம் நாள் போராட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது.
கிளிநொச்சி வைத்தியசாலையை அண்மித்த ஊதிர வைரவர் ஆலயத்திற்கு முன்பாக குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது,முதலாம் திகதி மன்னாரில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.“கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' எனும் தொனிப்பொருளில், வடக்கு கிழக்கு உட்பட 8 மாவட்டங்களில் சுழற்சி முறையில் இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது,இன்றைய போராட்டத்தில் கிராம அடிப்படை அமைப்புக்கள், விவசாய, மீனவ சங்கங்கள், பெண்கள் மற்றம் மாணவர் அமைப்புக்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.இதன்போது ஏ9 வீதியின் ஓரத்தில்கவனயூர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து மக்கள் அமைதியான மறையில் அமர்ந்திருந்து கவனயீர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.