Category:
Created:
Updated:
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, இராமநாதபுரம் புதுக்காடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் இருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 600 லீற்றர் கோடாவும், அறுபத்தி இரண்டு (62) போத்தல் கசிப்பும் சிறப்பு அதிரடிபடையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.இரண்டு சந்தேக நபர்களையும் சிறப்பு அதிரடிப்படையினர் தருமபுரம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு இன்று நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.இதன்போது குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 09.08.2022 வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளதாக தருமபுரம் பொலிசார் தெரிவிக்கின்றனர்.