முல்லைத்தீவு மாவட்டத்தில்உள்ள சகல பிரதேச செயலகங்களிலும் ஆர்ப்பாட்டம் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
நேற்று முன்தினம் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலாளர் அலுவலகத்தில் இருந்த எரிபொருட்கள் பொலிசாரால் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசாரின் செயற்பாட்டிற்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாக குறித்த ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு, துணுக்காய் மற்றும்ஒட்டிசுட்டான்,கரந்துறைப்பற்று,புதுக்குடியிருப்பு ,மணலாறு பிரதேச செயலகங்களிலும் நேற்று முன்னெடுக்கப்பட்டதுஇதே வேளை மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலகங்களிலும் குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று காலை இடம்பெற்றிருந்ததுகுறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்“ஊடக சுதந்திரத்தை துஸ்பிரயோகம் செய்யாதே”“அலுவலகத்தில் உட்புகுந்து பொருத்தமற்ற முறையில்கையாண்ட சகல தரப்பினருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”“தனிப்பட்ட பழிவாங்கல்களுக்காக ஊடகத்தைபயன்படுத்தாதே”“பொதுமக்களை தவறாக வழிநடத்தாதேபோன்றசுலோகங்களை ஏந்தியவாறு பிரதேச செயலக வாயில்களில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டநடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில்நிர்வாக செயற்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என்பதுடன் பொதுமக்கள் வெளியிலேகாத்திருக்கவேண்டிய சூழ்நிலையும் காணப்பட்டது