சினிமா செய்திகள்
பிரமிக்க வைத்த  நடிகர் வேல ராமமூர்த்தி பேத்த திருமணம்
எதிர்நீச்சல் தொடரில் நடித்ததன் மூலம் அதிகம் பிரபலமானவர் நடிகர் வேல ராமமூர்த்தி. இவரின் பேத்தி திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் தங்கத்தால் ஆன மாலையை
ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த அமரன் திரைப்படத்தின் வசூல்
சிவகார்த்திகேயன் - ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி கடந்த அக்டோபர் 31ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் அமரன். இப்படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயக
ஒரு வாய்ப்பும் இல்லாமல், லட்சக்கணக்கில் வருமானம் வரும் 5 பிரபலங்கள்
1 )காமெடி நடிகர் செந்திலுக்கு கோடம்பாக்கத்தில் 48 போஷன் வசிக்கும் அபார்ட்மெண்ட்டை மூலம் வாடகை மட்டும் மாதம் லட்சக்கணக்கில் வருகிறது. 2 ) 80களில் முன்ன
நயன்தாரா மற்றும் நெட்பிளிக்ஸ் மீது வழக்குத் தொடர்ந்தார் தனுஷ்
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த திருமணத்தின் வீடியோ ’Nayanthara Beyond the fairy
மகனிடம் இருந்து  கற்றுக் கொண்டேன் - ஜெனிலியா
தமிழில் ஜெனிலியா சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றார். இந்த படங்கள் இவருக்கு சினிமாவில
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர் யார் தெரியுமா?
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் இந்த பட்டியலில் முதல் இடத்தில் விஜய் இருந்தார். ஆனால், தற்போது வி
தனது வருங்கால கணவர் யார் என வெளிப்படையாக கூறினார் ராஷ்மிகா
புஷ்பா 2 படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகாவிடம் தொகுப்பாளினி, ‘நீங்கள் சினிமாத்துறையில் உள்ளவரை திருமணம் செய்துக் கொள்வீர்களா? அல்லது சி
ராஷ்மிகா தனது காதலர் உடன் ஹோட்டலில் சாப்பிடும் போட்டோ வைரல்
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு ஹிந்தியில் அதிகம் ரசிகர்கள
சிவகார்த்திகேயன் மிகவும் திறமையானவர் என தெரிவித்த ரம்யாகிருஷ்ணன்
அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது. உலக அளவில் அமரன் படம் ரூ. 300 கோடி அளவில் வசூல் செய்துள்ளது.சிவக
பொய்யான தகவல்கள் பகிர்வதை தவிர்க்கவும் - ஏஆர்.ரஹ்மான் மகன்
ஏஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்த செய்திகள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.சமூக வலைதளங்களில் இந்த
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்துக்கான காரணத்தை சொன்ன வக்கீல்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹாலிவுட் வரை கொடிக்கட்டி பறப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் கடந்த 1995ம் ஆண்டில் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய
பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் கூறிய தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா
கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடந்த நிலையில், இருவரும் பிரிவதாக முடிவெடுத்து, நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.  
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 4 friends

தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேசத்தயாராகவே நாங்கள் இருக்கிறோம்: நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

சனிக்கிழமை (30.07.2022) கிளிநொச்சி இராமநாதபுரம் வட்டாரத்தில் மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது குறித்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் இந்த மண்ணிலே புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக யார் இருந்தாலும் நாங்கள் பேசுவோம் அந்த வகையில் ரணில் விக்கிரமசிங்கவோடும் நாம் பேசுவோம். ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 19 தடவைகள் பேசியிருக்கிறோம் கோத்தபாய ராஜபக்ஷவுடனும் ஒரு தடவை பேசியிருக்கிறோம் இவ்வாறு இந்த நாட்டில் யார் யார் எல்லாம் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்களோ அவர்களுடன் எல்லாம் தமிழர் தரப்பு பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 3 ஆம் திகதியன்று பாராளுமன்றில் தனது அக்கிராசன உரையை நிகழ்த்தவுள்ளார். இவர் தனது அக்கிராசன உரையில் புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவிப்பாரா? அல்லது முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச போன்று அனுராதபுரத்தில் பதவியேற்ற போதும் சரி தனது அக்கிராசன உரையிலும் சரி மக்களால் விரட்டியடிக்கப்படும் வரை தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசாதது போன்று இவரும் செயற்படுவாரா? எனும் சந்தேகம் இப்போது எழுந்திருக்கிறது.40 வருடங்களுக்கு மேலான அரசியல் அனுபவத்தை கொண்டுள்ள ஜனாதிபதி இந்த நாடு இப்படி பொருளாதார ரீதியில் அதளபாதாளத்திற்கு போவதற்கு பிரதான காரணமாக இருந்தது. ஒரு இனத்தின் மீது நடைபெற்ற போர்தான் என்பதை புரிந்து வைத்திருப்பார். எம் மீது நடைபெற்ற இனவழிப்பின் பங்காளியாக இருந்தவர் எமது விடுதலைப் போராட்டத்தை சூழ்ச்சியால் பிரித்த ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதார நிலையை சீர் செய்ய வேண்டும் என்றால் முதலில் இனப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.குறித்த சந்திப்பில் சமகால அரசியல் தொடர்பிலும் பொருளாதார பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.

  • 285
  • More
Attachments
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads