யூரியா உரத்தினை பெற்றுத்தருமாறு ஆணையாளர் நாயகத்திடம் விரைவாக வழங்கி வைக்குமாறு ஆணையாளர் நாயகத்தினால் தேசிய உரக் கூட்டுத்தபானத்திற்கு அறிவுறுத்தல்
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக செய்கைக்கு தேவையான 222.65 மெற்றிக் தொன் யூரியா உரத்தினை பெற்றுத்தருமாறு ஆணையாளர் நாயகத்திடம் மாவட்ட அரச அதிபரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மேற்படி யூரியா உரத்தினை விரைவாக வழங்கி வைக்குமாறு ஆணையாளர் நாயகத்தினால் தேசிய உரக் கூட்டுத்தபானத்திற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு தேவையான யூரியா உரத்தினை உடனடியாக வழங்குமாறு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகதத்தினால் தேசிய உரக் கூட்டுத்தாபனத்திற்கு கடந்த 22ம் திகதி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அதாவது, கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கை மேற் கொண்டுள்ள விவசாயிகளுக்கு தேவையான 222.65 மெற்றிக் தொன் யூரியா உரத்தினை பெற்றுத்தருமாறு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்திடம் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்களால் விடுக்கப்பட்ட வேண்டு கோளுக்கு அமைவாக குறித்த உரத்தினை அனுப்பி வைக்குமாறு இலங்கை உர கூட்டுத் தாபனத்திற்கு ஆணையாளர் நாயகத்தினால் கடிதம் மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மேற்படி உரக் கூட்டுத்தாபணத்தினுடக கிளிநொச்சி மாவட்டத்திற்கு தேவையான 222. 65 மெற்றிக் தொன் உரத்தினை கமநல சேவை நிலையங்களினுாடாக விநியோகிக்கும் செய்ற் பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விவசாயிகளுக்கு தேவையான உரத்திணை விரைவாக பெற்றுக் கொடுப்பதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுத்த மாவட்ட அரச அதிபர் மற்றும் கமநல சேவை திணைக்களத்தின் ஆணையாளர் ஆகியோருக்கு விவசாயிகள் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.