Category:
Created:
Updated:
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (26-07-2022)எரிபொருள் வழங்கப்படவில்லையென தெரிவித்து பொதுமக்கள் ஏ-09 வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் போலீசாரின் தலையிட்டால் குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.கரைச்சி வடக்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு தினம் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றைய தினம் கடைசி இலக்கங்களின் அடிப்படையில் எரிபொருள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும் எரிபொருள் வழங்கப்படாத நிலையில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் வீதியை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டு இருந்த நிலையில் போலீசாரின் தலையிட்டால் குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.