
விவசாயிகளுக்கு யூரியா உரம் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் இம்முறை சிறுபோக நெற்செய்கையினை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு யூரியா உரம் இன்றைய தினம் செவ்வாய்கிழமை (19) மதியம் மாந்தை கிழக்க்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாண்டியன்குளம் கமநல சேவைகள் நிலையத்தில் வைத்து வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
மாந்தை கிழக்கு கமநல சேவைகள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு( யூரியா) உரம் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.ஒரு ஏக்கர் சிறுபோக விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 20 கிலோ யூரியா உரம் வழங்கி வைக்கப்பட்டது.யூரியா உரத்தில் முதல் கட்டமாக கிடைக்கப்பெற்ற 27000 kg யூரியா விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.இதேவேளை கருத்துரைத்த கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐம்பது நாட்களுக்கு மேற்பட்ட பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான யூரியா உரம் மாந்தை கிழக்கு க்கு முதற்கட்டமாக 540 பாய்க் கிடைக்கப்பெற்றுள்ளன.முதற்கட்டமாக கிடைக்கப்பெற்றுள்ள உரத்தில் விநாயகர்புரம், பூவரசங்குளம், பொன்னகர் விவசாயிகளுக்கு இன்று வழங்குகின்றோம்தொடர்ச்சியாக கிடைக்கபெறும் உரத்தினை ஏனைய கிராமங்களுக்கும் வழங்குவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றோம் என்று தெரிவித்தார்.