Category:
Created:
Updated:
கிளிநொச்சி மாவட்டத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற கரைச்சி புளியம்பக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா இன்று (18-07-2022) பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. காலை விசேட அபிஷேகங்களை தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றுள்ளது தொடர்ந்து பத்து நாட்கள் பூசை வழிபாடுகள் இடம் பெறுவதுடன் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை தேர்த் திருவிழாவும் 28ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.