
கிளிநொச்சியில் கம நல அபிவிருத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தினால் பதிவுக்குட்படுத்தப்படாத அமைப்பொன்று விவசாயிகளிடமிருந்து பணம் அளவீடு செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது
கிளிநொச்சியில் கம நல அபிவிருத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தினால் பதிவுக்குட்படுத்தப்படாத அமைப்பொன்று 2000 ஆம் ஆண்டில் 46 ஆம் இலக்க கம நல அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் 40 ஆம் பிரிவுக்கு முரணான விதத்தில் விவசாயிகளிடமிருந்து பணம் அளவீடு செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழுள்ள கமக்கார அமைப்புக்களை கொண்டு செயற்படும் இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனம் இதுவரை காலமும் கம நல அபிவிருத்திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தினால் பதிவுக்குட்படுத்தப்படாத அமைப்பொன்றாகவே செயற்பாட்டு வருவதாக திணைக்கத்தில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தகவல்களில் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறு பதிவு செய்யப்படாது செயல்பட்டு வருகின்ற அமைப்பொன்று 2000 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கட்டளை சட்டத்தின் கீழ் பதிவு உட்படுத்தப்படாது விவசாயிகளிடமிருந்து பதிவுக்கு உட்படது விவசாயிகளிடமிருந்து பெருந்தொகையான நிதியை அறவிட்டிருப்பது குறித்த சட்டத்தின் 40 ஆம் பிரிவுக்கு எதிராக செயற்பாடாகும்.
இவ்வாறான நிலையில் பதிவு செய்யப்படாத ஒரு அமைப்பானது விவசாயிகளிடமிருந்து நேரடியாக பணத்தை அளவிட்டுள்ளமை வெளிப்படையாக தெரியவந்துள்ளது.
இவ்வாறு விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்ட பணம் வங்கிகளில் வைப்பிலிடப்படாது நேரடியாக கையாளப்பட்டதாகவே இரணைமடுக்குளத்தின் கீழான கமக்கார அமைப்புக்கள் குறிப்பிட்டுள்ளன.இவ்வாறு பதிவுட்படாத அமைப்பொன்று நிதிகளை கையாண்டிருப்பது தொடர்பில் மாவட்டத்தின் அரச அதிகாரிகள் மௌனமாக இருந்தார்களா? அல்லது உடந்தையாக இருந்தார்களா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.