
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறு போக செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கான யூரியா உரத்தினையும் அறுவடைக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக் கொடுப்பதற்கும் விரைவாக நடவடிக்கை மாவட்ட அரச அதிபர் றுாபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் (14-07-2022) நடைபெற்ற விவசாயிகளுடனான கலந்துரையாடலையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது கிளிநொச்சி மாவட்டத்தில் காலம் பிந்திய விதைப்புகள் மேற்கொண்டுள்ள ஏறத்தாழ ஆறாயிரம் ஏக்கர்வரையான நிலப்பரப்புக்கு யூரியா உரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அதாவது பல்வேறு காரணங்களுக்காக காலம் தாழ்த்தி பயிர்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு யூரியா உரத்தினை பெற்றுக் கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று மாவட்ட மட்டத்திலேயே நடைபெற்றுள்ளது.
இதில் துறை சார்ந்த அதிகாரிகளும் கமக்கார அமைப்புகளினுடைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர் அந்த அடிப்படையிலேயே கமக்காரா அமைப்புகளால் சமர்ப்பிக்கப்படுகின்ற விவரங்களுக்கு அமைய அவற்றை உரிய திணைக்களங்களுக்கு அனுப்பி உரத்தைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது மேலும் விவசாயிகளுடைய அறுவடைக்கு தேவையான எரிபொருளை பெற்று கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.