
சிறுபோக பயிர் செய்கை தொடர்பில் மாறி மாறி திகதிகளை கமக்கார அமைப்புகள் குறிப்பிட்டுள்ளதனால் யூரியா உடன் கிடைக்காமல் போயிருப்பதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டுள்ள சிறுபோக பயிர் செய்கை தொடர்பில் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு ஒரு திகதியும் உரத்தினை பெற்றுக் கொள்வதற்கு ஒரு திகதியும் என மாறி மாறி திகதிகளை கமக்கார அமைப்புகள் குறிப்பிட்டுள்ளதனால் இவ்வாறு யூரியா உடன் கிடைக்காமல் போயிருப்பதாக இன்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற் செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரம் கிடைக்காத நிலையில் இவற்றைப் பெற்றுத் தருமாறு கோரி கடந்த செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் சம்மேளத்தினால் மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டிருந்தது.
குறித்த கோரிக்கை அமைப்பாக 14-07-2022 மாவட்ட அரச அதிபர் றுாபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலின் போது கிளிநெச்சி மாவட்டத்தில் பயிர்ச் செய்கை குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய பயிர் செய்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட சில குளங்களின் கீழ் காலம் தாழ்த்திய விதைப்புகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இது தொடர்பான விவரங்களை சம்பந்தப் பட்ட கமக்கார அமைப்புகள் உரிய கம நல சேவை நிலையங்களுக்கு சமர்ப்பிக்கவில்லை என்றும் இதன் விளைவாகவே யூரியா உரம் கிடைக்கவில்லை என்பது என்பதை அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர் குறிப்பாக கிளிநொச்சி கமநல சேவை நிலையத்தின் பெரும் பாக உத்தியோகத்தினால் காலம் பிந்திய விதைப்புகள் தொடர்பான விவரங்களை கமநல அதிகார சபையின் தலைவர் மற்றும் விவசாய அமைப்புகளிடம் கோரியபோதும் அதற்கான திகதிகளை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் பெரும்பாக உத்தியோகத்தர் முன்வைத்த போது அமைப்பின் பிரதிநிதிகளை ஏற்றுக் கொண்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
உரிய கமகார அமைப்புகள் காலம் பிந்திய விதைப்புக்கள் தொடர்பில் உரிய தகவல்களை உரியவாறு வழங்காததன் விளைவாகவே மாவட்டத்திற்கு இம்முறை யூரியா உரம் கிடைக்காத நிலை ஏற்பட்டிருப்பதாக ஏற்பட்டது என்பதனை கமக்கார அமைப்பினுடைய பிரதிநிதிகளை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
மாவட்ட பயிர்செய்கை கூட்டத் தீர்மானங்களுக்கு கூட்ட தீர்மானங்களுக்கு மாறாக காலம் பிந்திய 6000 ஏக்கர் நிலப்பரப்பு இவ்வாறு பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் இதற்கான யூரியா உரம் தேவையான நிலையில் காணப்படுகிறது. அது தொடர்பிலான விவரங்களை கமக்கார அமைப்புகள் வழங்கி இருந்தன இவ்வாறு வழங்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அடிப்படையில் 6 ஆயிரம் ஏக்கர் வரையில் இவ்வாறு அடையாளம் காணப்பட்டு உரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதனை விரைவாக பெற்று வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.