திண்டுக்கல்-மயிலாடுதுறை இடையே புதிய பாசஞ்சர் ரெயில் சேவை
திண்டுக்கல்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில் திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்பட்டது. மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே பயணம் செய்தனர். திண்டுக்கல்-மயிலாடுதுறை இடையே பாசஞ்சர் ரெயில் இயக்கப்பட்டதால் மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக பயணிகள் கூறினர். இந்த ரெயிலில் மொத்தம் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன.
வையம்பட்டி, மணப்பாறை, திருச்சி, மஞ்சத்திடல், திருவெறும்பூர், பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை, குத்தாலம் ஆகிய ரெயில் நிலையங்களில் அந்த ரெயில் நின்று செல்கிறது. அதேபோல் மறுமார்க்கத்தில் காலை 11.25 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு (ஈரோடு-நெல்லை ரெயிலுக்கு முன்பு) திண்டுக்கல்லை வந்தடைகிறது.
இதனால் மயிலாடுதுறை-திண்டுக்கல் ரெயிலில் வரும் நெல்லை, மதுரை பயணிகள் எளிதாக ஈரோடு-நெல்லை ரெயிலில் பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.