சினிமா செய்திகள்
மகனிடம் இருந்து  கற்றுக் கொண்டேன் - ஜெனிலியா
தமிழில் ஜெனிலியா சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதை வென்றார். இந்த படங்கள் இவருக்கு சினிமாவில
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர் யார் தெரியுமா?
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் இந்த பட்டியலில் முதல் இடத்தில் விஜய் இருந்தார். ஆனால், தற்போது வி
தனது வருங்கால கணவர் யார் என வெளிப்படையாக கூறினார் ராஷ்மிகா
புஷ்பா 2 படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகாவிடம் தொகுப்பாளினி, ‘நீங்கள் சினிமாத்துறையில் உள்ளவரை திருமணம் செய்துக் கொள்வீர்களா? அல்லது சி
ராஷ்மிகா தனது காதலர் உடன் ஹோட்டலில் சாப்பிடும் போட்டோ வைரல்
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு ஹிந்தியில் அதிகம் ரசிகர்கள
சிவகார்த்திகேயன் மிகவும் திறமையானவர் என தெரிவித்த ரம்யாகிருஷ்ணன்
அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்துள்ளது. உலக அளவில் அமரன் படம் ரூ. 300 கோடி அளவில் வசூல் செய்துள்ளது.சிவக
பொய்யான தகவல்கள் பகிர்வதை தவிர்க்கவும் - ஏஆர்.ரஹ்மான் மகன்
ஏஆர்.ரஹ்மான் தனது மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்யப்போவதாக சமீபத்தில் அறிவித்த செய்திகள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.சமூக வலைதளங்களில் இந்த
ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்துக்கான காரணத்தை சொன்ன வக்கீல்
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹாலிவுட் வரை கொடிக்கட்டி பறப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் கடந்த 1995ம் ஆண்டில் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய
பிரிவதில் உறுதியாக இருப்பதாக நீதிபதியிடம் கூறிய தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா
கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடந்த நிலையில், இருவரும் பிரிவதாக முடிவெடுத்து, நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.  
 ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். இதனையடுத்து இந்திய திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இரு
சிறையில் தூக்கமின்றி தவிக்கிறார் நடிகை கஸ்தூரி
சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகை கஸ்தூரி, முதல் நாளில் தூக்கமின்றி தவித்ததாக சொல்லப்படுகிறது. சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட உணவையும் குறைந
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீஸானது நயன்தாராவின் கல்யாண கேசட்
இயக்குர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற இந்த திருமணத்தின் வீடியோ ஒரு ஆவணப்படமாக உருவாக
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கையால் பரபரப்பு
தனுஷ் குறித்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், திரு தனுஷ், பல தவறான விஷயங்களை நேர்மையாக சரி செய்வதற்காக இந்த
Ads
 ·   ·  8069 news
  •  ·  5 friends
  • I

    9 followers

அ.தி.மு.க. பொதுக்குழுவில் சட்ட கட்சியின் விதிகளில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள்

அ.தி.மு.க. பொதுக்குழுவில் இன்று கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய சட்ட திருத்தங்கள் என்னென்ன என்பது பற்றிய விவரம் வருமாறு:- * அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்றும், இனி அந்த பதவிக்கு யாரும் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்றும் இருந்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது. 

* ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகளுக்கு பதில் பொதுச்செயலாளர் என்ற விதி திருத்தப்படுகிறது. 

* பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படுபவர் சட்டவிதிகளுக்கு உட்பட்டு தனது பணிகளை நிறைவேற்றுவார். 

* நிர்வாக பொறுப்புகள் அனைத்தையும் பொதுச்செயலாளரே கவனிப்பார். 

* தலைமை செயற்குழுவை அமைக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு வழங்கப்படுகிறது. 

* இந்த பணிகள் அனைத்தையும் இதுநாள் வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மேற்கொண்டு வந்தனர். இதில் தான் தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 

* பொதுச்செயலாளர் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டால் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார். இதற்கு முன்னர் இந்த ஒருங்கிணைப்பாளர்களால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களே கட்சி பணிகளை மேற்கொள்வார்கள் என்கிற விதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 

* அனைத்து அமைப்புகளின் வரவு- செலவுகளை ஆராய்தல், அசையும், அசையா சொத்துக்கள் பற்றி எழும் சட்ட பிரச்சினைகளில் 

நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு அளிக்கப்படுகிறது. கட்சி கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும், ஒழுங்கு நடவடிக்கை தீர்மானங்கள் மீது இறுதி நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் பொதுச்செயலாளருக்கே அளிக்கப்படும் நிலையில் கட்சி பதவிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அதிகாரங்கள் முன்னர் ஒருங்கிணைப்பாளரிடம் இருந்தது. 

* அ.தி.மு.க.வின் தேவைக்காக வங்கிகளில் கடன் வாங்குவதற்கும், அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடவும் பொதுச்செயலாளருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. வங்கிகளில் பணம் போடவும், எடுக்கவும் அதிகாரம் அளிக்கப்படுகிறது. 

* அ.தி.மு.க. சார்பில் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் அதிகாரிகளுக்கு எழுதும் அனுமதி படிவங்களில் பொதுச்செயலாளரே இனி கையெழுத்து போடுவார். அந்த அதிகாரமும் ஒருங்கிணைப்பாளர்கள் வசம் இருந்தது. அந்த விதி நீக்கப்பட்டுள்ளது. 

* கிளை, வார்டு, வட்ட கழகங்களில் கூடுதலாக பொறுப்புகளை நியமிக்கும் அதிகாரம் முழுமையாக பொதுச் செயலாளருக்கு அளிக்கப்பட்டுள்ளது. * துணை ஒருங்கிணைப்பாளர்கள் என்கிற பதவிக்கு பதில் துணை பொதுச்செயலாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இவர்களை பொதுச்செயலாளர் நியமிப்பார். துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவி இனி இருக்காது. 

* கட்சியின் சட்ட திட்ட விதிகளை இயற்றவும், திருத்தவும் பொதுக்குழு அதிகாரம் படைத்ததாகும். ஆகையால் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவார் என்கிற விதி மட்டும் நீக்குவதற்கோ, மாற்றுவதற்கோ, திருத்துவதற்கோ உரியது இல்லை. 

* சட்ட விதிகளை திருத்துவதற்கு பொதுச் செயலாளருக்கு முழு அதிகாரம் உண்டு. 

* அ.தி.மு.க. சட்ட விதிகளில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற சொற்றொடர்கள் எங்கெல்லாம் வருகிறதோ, அந்த இடங்களில் எல்லாம் இனி பொதுச்செயலாளர் என்று மாற்றி அமைக்கப்படுகிறது. இவ்வாறு அ.தி.மு.க. பொதுக்குழுவில் சட்ட கட்சியின் விதிகளில் அதிரடியாக தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

  • 561
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads