
கிளிநொச்சி பூநகரி ஞானிமடம் கறுக்காய் தீவு ஆகிய பகுதிகளில் குடிநீர் வழங்கப்படாமையினால் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தமக்கான குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம்
கிளிநொச்சி பூநகரி ஞானிமடம் கறுக்காய் தீவு ஆகிய பகுதிகளில் இதுவரை தமக்கான குடிநீர் வழங்கப்படாமையினால் தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தமக்கான குடிநீர் வசதியை ஏற்படுத்தி தருமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்தின் புனகரி பிரதேசமானது வருடமுழுவதும் குடிநீர் நெருக்கடியை எதிர்கொள்ளுகின்ற ஒரு பிரதேசமாக காணப்படுகிறது. இந்த பிரதேசத்தில் குடிநீர் வினியோகத்துக்காக பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும் அவை இழுத்தடிக்கப்பட்டும் கிடப்பில் போடப்பட்டு வருகின்றன. இதனால் குறித்த பிரதேசத்தில் வாழும் ஏராளமான மக்கள் தமக்கான குடிநீர் பெற்று கொள்வதில் நாளாந்தம் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.இந்த நிலையில் தமக்கான குடிநீர் வழங்குவதற்கு இதுவரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தொடர்ந்தும் பாரபட்சம் காட்டி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளதுடன் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையானது ஏற்கனவே குடிநீர் வளம் கொண்ட பிரதேசங்களுக்கு குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்படுகின்றதே தவிர எந்தவித குடிநீர் வசதியும் இல்லாத தங்களுடைய பிரதேசத்தின் ஊடாக குழாய்கள் பொருத்தப்பட்டு வேறு கிராமங்களுக்கு நீர் கொண்டு செல்லப்படுகின்ற போதும் தமக்கு இதுவரை குடிநீர் தரவில்லை என தெரிவித்தும் தமக்கான குடிநீரை பெற்றுத் தருமாறுகோரியம் இன்று(07-07-2022) ஞானிமடம் சித்தங் குறிச்சி செம்மண் குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களும் செட்டிய குறிச்சி கறுக்காய் தீவு ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்களும் இணைந்து பூநகரி ஞானிமடம் பாடசாலை முன்பாக ஒன்று கூடி மாளிகை வீட்டுக்கு நன்னீரா ஏழையின் வீட்டுக்கு உவர் நீரா வழங்கு வழங்க தாமதிக்காது குடிநீரை வழங்க ஏமாற்றாதே ஏமாற்றாதே, தினமும் நம்மை ஏமாற்றாதே, அரசு அதிகாரிகளே முன்னுரிமைப்படுத்தி குடிநீர் வழங்க வேண்டிய எமது பிரதேசம் புறக்கணிக்கப்பட்டது ஏன் என பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு பூநகரி பிரதேச செயலகம் வரை சென்று அங்கு பிரதேச செயலாளர் மாவட்ட அரசு அதிபர் ஆகியோருக்கான மகஜகர்களை கையளித்தனர்,குறித்த பிரதேசத்தில் சுமார் 294க்கு மேற்பட்ட குடும்பங்கள் இதுவரை குடிநீரின்றி பெரும் சிரமங்களை எதை நோக்கி வருவதாக தெரிவித்துள்ளனர் குறிப்பாக கடந்த காலங்களிலே பிரதேச சபையினால் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டிருந்தாலும் தற்போது எரிபொருள் இம்மையை காரணம் காட்டி தங்களுக்கான குடிநீர் நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.