
தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையினால் குடிநீர் குழாய்களை பொருத்துவதற்கு வெட்டப்பட்ட குழிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மூடப்படாது ஆபத்தான நிலையில்
கிளிநொச்சி கோனாவில் மற்றும் யூனியன் குளம் ஆகிய பகுதிகளில் குடிநீர் குழாய்கள் பொருத்துவதற்காக வெட்டப்பட்ட குழிகள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக மூடப்படாத நிலையில் பாதுகாப்பற்று ஆபத்தாக காணப்படுவதனால் இப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுத்து விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்கோணாவில் மற்றும் யூனியன்குளம் ஆகிய பகுதிகளில் தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு சபையினால் குடிநீர் குழாய்களை பொருத்துவதற்கு வெட்டப்பட்ட குழிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மூடப்படாது ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.
இவ்வாறு காணப்படுகின்ற குழிகளில் பலர் விபத்துக்குள்ளாகி வருகின்றர் குறிப்பாக சிறுவர்கள் பாடசாலை மாணவர்கள் வயோதிபர்கள் தினமும் பயணிக்கின்ற குறித்த வீதிகளில் இவ்வாறு பாரிய குறிகள் வெட்டப்பட்டு மிக ஆபத்தான்களை காணப்படுகிறது.
அத்துடன் பல இடங்களில் வீதிகள் துண்டாடப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றன எனவே இந்த விடயங்கள் தொடர்பில் உரிய தரப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்